இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

அனுராதபுரத்தில் இருந்து தலாவ நோக்கி பயணித்த கெப் வாகனம் ஒன்று விபத்திற்குள்ளானதில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது.
நேற்று (08) அனுராதபுரத்தில் இருந்து தலாவ நோக்கி சென்று கொண்டிருந்த கெப் வாகனம் மொரகொட 05 வது மைல் கல் பகுதியில் தலாவ பகுதியில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த கார் ஒன்றுடன் மோதி வேக கட்டுப்பாட்டை இழந்து சுமார் 250 மீட்டர் தூரம் வீதியை விட்டு விலகிச் சென்று வீதியோரத்தில் இருந்த வியாபார கூடாரத்தில் மோதி யானை வேலியினையும் உடைத்துச் சென்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த இரண்டு வாகனங்களிலும் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களோ உயிராபத்துக்களோ ஏற்படவில்லை என அனுராதபுரம் தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
