ஓட்டமாவடி தாருல் உலூம் மாணவி பாத்திமா சஸ்னி தேசிய சித்திரப் போட்டியில் முதலிடம்
ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தில் தரம் 4 இல் கல்வி கற்கும் மாணவி பாத்திமா சஸ்னி தேசிய ரீதியாக INSEE ECOCYCLE அமைப்பு நடாத்திய சித்திரப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.எல்.பைசல் தெரிவித்தார்.
இவர், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.கடாபி என்பவரின் புதல்வியாவார்.
உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் தனது ஆற்றலை வெளிப்படுத்தி தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுக் கொண்டுள்ள மாணவி சஸ்னிக்கு பாடசாலை அதிபர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
