கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; பலியானவர் தொடர்பில் வெளியான தகவல்
கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த புகுடு கண்ணா எனப்படும் பாலச்சந்திரன் புஷ்பராஜின் நெருங்கிய தோழர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
நேற்று இரவு கொட்டாஞ்சேனையில் காரொன்றில் வந்த குழுவினர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
சம்பவத்தில் 43 வயதானவரே உயிரிழந்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் 9 மில்லிமீட்டர் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
