2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்; எதிர்வரும் மார்ச் மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை பாவனைக்கு
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகள்:
எதிர்வரும் மார்ச் மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை பாவனைக்கு
அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு தேசிய உற்பத்தியை 20 சதவீதமாக முகாமைத்துவம் செய்வதற்கு நடவடிக்கை.
நாட்டில் வேலையின்மை வீதத்தை 4.5 இல் இருந்து 3.8 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை.
பணவீக்கத்தை 5 சதவீதத்துக்கு குறைவான மட்டத்தில் பேணுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
காணி தகவல் உள்ளிட்ட மத்திய டிஜிட்டல் சேவைக்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
கைத்தொழில் அபிவிருத்திக்கு மேலும் 1000 மில்லியன் ரூபாய்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு கடன் வழங்க 5900 மில்லியன் ரூபாய்.
பொருளாதார நெருக்கடியில் வியாபாரிகளுக்கு 15 மில்லியன் ரூபாய் கடன் வழங்குவதற்காக 25,000 மில்லியன் ஒதுக்கீடு.
2026 ஆம் ஆண்டு பல்வேறு கடன்களுக்காக 80,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
விவசாய அபிவிருத்திக்கு 1700 மில்லியன் ரூபாய்.
நீர்நிலை சுற்றுலா மேம்பாட்டுக்கு 3500 மில்லியன் ரூபாய்.
அரசின் கீழுள்ள சுற்றுலா விடுதிகள் ,வாடி வீடுகள் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக வழங்கப்படும்.
சுற்றுலாத்துறை தொழில்சார் நிபுணர்களை உருவாக்க 500 மில்லியன்
ஊவா மாகாணத்தில் ஹப்புத்தளை உள்ளிட்ட பல பகுதிகள் சுற்றுலா தளங்களாக மேம்படுத்தப்படும்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த வருடம் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
QR முறை மூலம் 5000 ரூபாய்க்கு கீழ் கட்டணம் செலுத்தும் போது சேவை கட்டணம் நீக்கப்படும்.
