சிறந்த அறிவுக் கேந்திரமாக கொழும்பு துறைமுக நகர் தெரிவு
இலங்கையின் முதன்மையான ஸ்மார்ட் சிட்டி திட்டமான கொழும்பு துறைமுக நகரம் (Port City Colombo), இன்டலிஜென்ஸ் குளோபல் பிரீ ஸோன்ஸ் ஒப் த இயர் 2025 (fDi Intelligence Global Free Zones of the Year 2025) விருதுகளில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் சிறந்த அறிவுக் கேந்திரமாக தெரிவு செய்யப்பட்டு, இலங்கைக்கு ஒரு முக்கிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது.
269 ஹெக்டேர் மீள் பெறப்பட்ட நிலத்தில் நிர்மாணிக்கப்பட்டு, 2021 ஆம் ஆண்டு முதல் ஒரு சிறப்புப் பொருளாதார வலயமாய் செயற்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரம், சேவைத் துறை முதலீடுகளுக்கான ஒரு மையமாக மாறியுள்ளது.
இதன் முதலீட்டாளர் நட்பு கொள்கைகள், வரிச் சலுகைகள் மற்றும் சட்ட கட்டமைப்புகளை நீதிபதிகள் குழு பாராட்டியது.
இந்த அங்கீகாரம், உலகளாவிய சேவைத் துறை அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்ப்பதில் இலங்கையின் வளர்ந்து வரும் பங்கை எடுத்துக்காட்டுகிறது.