உலகம்

நாகூர் இ. எம். ஹனீபாவின் நூற்றாண்டு விழாவிற்கு பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் வாழ்த்து, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

துபாயில் ஈமான் சங்கம் சார்பில்
நாகூர் இ.எம்.ஹனீபா அவர்களின் நூற்றாண்டு விழா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஈமான் சங்க தலைவர் கீழக்கரை ஹபிபுல்லா, ஈமான் சங்க பொருளாளர் பிளாக் துலிப் எஹியா, நோபில் ஷாகுல் ஹமீது உள்ளிட்ட புரவலர்கள் பங்கேற்றார்கள்.

நாகூர் இ.எம்.ஹனீபா அவர்களின் நூற்றாண்டு விழா 11.10.2025 சனிக் கிழமை மாலை துபாய் ஷேக் ராஷித் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஈமான் கலாச்சார மையம் தலைவர் ஹபீபுல்லாஹ் காகா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கீழக்கரை ஹமீது யாசின் அனைவரையும் வரவேற்று பேசினார்.

விழாவில் நாகூர் இ.எம்.ஹனீபா அவர்களின் நூற்றாண்டு விழா பற்றிய நூலை தமிழ்நாடு பாடநூல் வாரிய தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி வெளியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பெற்றுக் கொண்டார். இந்த மலரை புரவலர்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது உரையில் பேசியதாவது : நாகூர் இ. எம். அனிபா அவர்களின் நூற்றாண்டு விழா இலங்கையில் மிகச் சிறப்பாக நடந்தியதில் எங்களுக்கு மிகப்பெருமையாக நாங்கள் கருதுகிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களை சந்நித்து உரையாட போது இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வேண்டும் இந்த விழாவில் அவர்கள் எனது மூலம் வாழ்த்து வரிகளை பகிர்ந்து உரையாற்றினார்.

தமிழ்நாடு பாடநூல் வாரிய தலைவர் திண்டுக்கல் லியோனி, தமிழ்நாடு சிறுபாண்மை ஆணைய துணைத்தலைவர் இறையன்பன் குத்தூஸ்,தேரிழந்தூர் தாஜுத்தீன், நெல்லை அபுபக்கர், அபுல் பரக்காத்,
காயல் இளவரசு, இலங்கையைச் சேர்ந்த கலைக்குயில் கமல், ரஹீமா பேகம்,புஷ்பவனம் குப்புசாமி, நவ்ஷாத் அலி அனீபா,பரீதா உள்ளிட்ட பிரபலங்கள் நாகூர் ஹனீபா அவர்களின் பாடல்களை ரசனையுடன் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்,அமீரக தொழிலதிபர் கண்ணன் ரவி, சமுதாயப் புரவலர்கள் நோபிள் ஷாஹுல் ஹமீது, பிளாக் துலிப் முஹம்மது எஹ்யா,ரேடியன்ட் ஆபித் ஜுனைத், எகனாமிக் ஜெனரல் டிரேடிங் அப்துல் ரவூஃப், அதீப் முஹம்மது அன்சாரி,வஜீர்,பவர் குழுமம் ஜாஹிர் ஹுஸைன், அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர் எஸ்.எஸ்.மீரான், எச்சிஎல் ஷரீஃப்,டாப் ஸ்டார் பைரோஸ்,நஜ்மா ஃபரீதா சிஇஓ ஹாஜா, அய்மான் பைத்துல் மால் தலைவர் அதிரை. ஷாஹுல் ஹமீது,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் எம்.எஸ்.ஏ.பரக்கத் அலி, முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, மக்கி பைசல்,அப்துல் ஜமீல் ஜிஃப்ரி,கவிஞர் முஹையத்தீன் பாட்ஷா, தர்பார் மீடியா கபீர்,தர்வேஷ், ஃபஜ்லுல் இலாஹி,தைபுல்லாஹ், அமீரக காங்கிரஸ் தலைவர் அப்துல் மாலிக், கீழக்கரை ஹமீது ரஹ்மான், மணிச்சுடர் ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றறார்கள்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *