சீனன்கோட்டை நலன்புரிச் சங்கத்தின் இலவச வைத்திய முகாம்
சீனன் கோட்டை நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த 03 ஆவது இலவச வைத்திய சிகிச்சை முகாம் 05 ஆம் திகதி பேருவளை சீனன் கோட்டை உஸ்மான்கந்தவில் இடம்பெற்றது.
இந்த சிகிச்சை முகாமில் 60 வைத்தியர்கள் அனைத்து நோய்களுக்குமான சுமார் 1000 பேருக்கு சிகிச்சை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
பேருவளை நகரபிதா மபாஸிம் அஸாஹிர், நகர சபை உறுப்பினர் ஸைத் அஹமத், சீனன் கோட்டை பள்ளிச்சங்க இணைச் செயலாளர் எம்.எம்.எம் ஷிஹாப் ஹாஜியார், பேருவளை பொலீஸ் நிலைய அதிகாரி எம்.ஆர். நவரத்ண உட்பட பள்ளிச்சங்க உறுப்பினர்கள், உஸ்மான்கந்த பலாஹ் ஸாவியா மஸ்ஜித் நிர்வாகிகள், சீனன் கோட்டை நலன்புரிச்சங்க தலைவர் உட்பட அதன் உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சீனன் கோட்டை நலன்புரிச் சங்கத்தின் இந்த நல்ல முயற்சியை பேருவளை நகர பிதா மபாஸிம் அஸாஹிர், சீனன் கோட்டை பள்ளிச்சங்க இணைச் செயலாளர் எம்.எம்.எம் சிஹாப் ஹாஜியார் ஆகியோர் பாராட்டினர்.
சங்க உறுப்பினர்கள் மிகவும் உச்சாகமாக தமது பணியை இதன் போது நிறைவேற்றினர்.
இங்கு உரைநிகழ்த்திய சமூக சேவையாளரும் மேற்படி சங்க முக்கியத்தரும் சீனன் கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர் சங்க நிர்வாக அதிகாரியுமான மபாஸ் மசூர் பிரதேச வாசிகளின் முழுமையான பங்களிப்போடு மூன்றாவது தடவையாகவும் இந்த இலவச வைத்திய சிகிச்சை முகாமை நடாத்தி வருவதாக குறிப்பிட்டார்.
இந்த வைத்திய சிகிச்சை முகாமில் நோயாளர்களை பரிசோதனை செய்து உரிய சிகிச்சை வழங்கிய வைத்தியர்கள், தாதிமார்கள் மற்றும் பாமஸி உதவியாளர்கள் பரோபகாரிகள் இதனை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க பூரண ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.











(பேருவளை பீ.எம். முக்தார்)