ஒரே வருடத்தில் இரண்டு தேசிய வெற்றிகளைப் பெற்ற புளிச்சாக்குளம் உமர் பாறுக் மகா வித்தியாலயம்
2025 ஆம் ஆண்டில், புளிச்சாக்குளம் உமர் பாறுக் மகா வித்தியாலய மாணவர்கள் இரண்டு தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்று, பாடசாலையின் நற்பெயரை நாடளாவிய ரீதியில் பிரகாசமாக்கியுள்ளனர்.
அகில இலங்கை தமிழ்மொழி தினப் போட்டியில் பாடசாலை மாணவிகள் இருவர் ஒரே வருடத்தில் இரண்டு தேசிய வெற்றிகளைப் பெற்றுள்ளனர்:
திறனாய்வுப் போட்டியில் ஜீ. தரண்யா முதலாம் இடத்தையும்,
இலக்கிய விமர்சனம் போட்டியில்
வீ. நதீஹாஷினி
மூன்றாம் இடத்தையும் பெற்று சாதித்துள்ளனர்.
இவ்விரு மாணவிகளின் வெற்றிக்குப் பின்னால் தினந்தோறும் வழிகாட்டியாக இருந்த திருமதி ஏ. சுலைஹா ஆசிரியையின் பங்கு பாராட்டப்படத்தக்கது என பாடசாலையின் அதிபர் எம்.யூ.எம். சாஜஹான் குறிப்பிட்டார்.
இந்த சாதனைகள் பாடசாலையின் கல்வித் தரத்தையும், கலாச்சார வளர்ச்சியையும் பிரதிபலிக்கின்றன.
வெற்றி பெற்ற
உமரியன்ஸுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)