ஜி .எம். எம். எஸ் பாடசாலையின் சிறுவர் தின கொண்டாட்டம்
உலக சிறுவர், முதியோர் தினத்தை முன்னிட்டு பல்வேறுபட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த வகையில் மத்திய முகாம் ஜி.எம்.எம். எஸ் பாடசாலையிலும் பல்வேறு சிறுவர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
பாடசாலையின் அதிபர் வி. எம். ஸம் ஸம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் “உலகை வழிநடத்த, அன்பால் போஷியுங்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
சிறுவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் மேடை நாடகம், நடனம், கதை, கவிதைகள் என்பன இடம் பெற்றது.
இதனிடையே இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களை பாராட்டி கௌரவித்து அன்பளிப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.
மத்திய முகாம் ஜி எம் எம் எஸ் பாடசாலை அதிபர் வி. எம். ஸம் ஸம் கருத்து தெரிவிக்கையில்
ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் சிறுவர்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் துஷ்பிரயோகங்கள், அநீதிகள் மற்றும் வன்முறைகளை இயன்ற அளவு குறைத்து அவர்களை சுதந்திரமாகவும், சகல விதமான உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதை நோக்கமாக கொண்டதாகும். எதிராகஇவ்வாறானதொரு தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கான காரணம் சிறுவர்களுக்கெதிராக அரங்கேற்றப்படுகின்ற துஷ்பிர யோகங்ளையும் அநீதிகளையும் இயன்றளவு குறைத்து அவர்களுக்கான சகலவிதமான உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதேயாகும்.
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்பது காலம் தொட்டு சொல்லப்படுகின்ற ஒரு விடயமாகும். அவர்களை சரியாக வழி நடத்துவது ஒவ்வொரு சமூகத்தவரின் கடமையாகும். இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்ற வகையில் அவர்களது எதிர்காலத்தைச் சிறப்பாக்கத் திட்டமிட்டு வழிநடத்த வேண்டும்.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இக்கால பகுதியில் அவர்களின் செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்தி எதிர்காலத்தை சிறப்பாக கொண்டு செல்ல பெற்றோர்களாகிய நாங்களும் அதிக அக்கறை உண்டு செயற்பட வேண்டியது கட்டாய கடமையாகும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

(ஏ.எச்.எம்.ஹாரீஸ்- மத்திய முகாம் செய்தியாளர்)