பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ரி20 லீக் போட்டிகளில் பங்கேற்க தடை
வெளிநாடுகளில் நடைபெறும் ரி20 லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கிய தகுதியில்லா சான்றிதழை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
17ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிராக பங்கேற்ற இறுதிப்போட்டி அடங்களாக இடம்பெற்ற 3 போட்டிகளிலும் இந்தியாவுக்கு எதிராக தோல்வியை தழுவியது பாகிஸ்தான். அதனடிப்படையில் உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியாகியுள்ளது.
மறு உத்தரவு வரும்வரை இந்த தடை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷகீன் ஷா அப்ரிடி உள்ளிட்ட 7 பாகிஸ்தான் வீரர்கள் டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள பிக்பாஷ் ரி20 போட்டியில் விளையாட இருந்தனர்.
தற்போதைய உத்தரவால் அதில் அவர்கள் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)