சிங்கப்பூர் ராயல் கிங்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஹாஜி சிராஜூதீன் தனது சொந்த நிதியில் இருந்து இலங்கை ஊடகவியலாளருக்கு தலா 25000 வீதம் 15 பேருக்கு அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, பலஸ்தீன் தூதுவர் இஹாப் ஐ. எம். கலீல் ஆகியோர் வழங்கினார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 30வது வருடாந்த பொதுக் கூட்டம் தபலாக கேட்போர் கூட்ட அரங்கில் 27.09.2015 சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு தலைவர் என்.எம் அமீன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் சுகாதார, மற்றும் ஊடக தொலைத்தொடர்பு அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் இஹாப் ஐ. எம். கலீல்,அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
விழாவில் 14 மூத்த ஊடகவியலாளர்களுக்கு பல்வேறு சாதனை புரிந்தமைக்கு பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகளை சுகாதார, மற்றும் ஊடக தொலைத்தொடர்பு அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, சவுதி அரேபியாவின் இலங்கை்கான தூதர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி, இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் இஹாப் ஐ. எம். கலீல்,அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார ஆகியோர் வழங்கினார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா மலர் குழு தாயாரித்த மீடியா போர மலர் வெளியீட்டு வைக்கப்பட்டது சிங்கள மொழி மூலம் முஸ்லிம் மீடியா போரத்தின் வெளியிடான நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் சமுக வாழ்க்கை நுால் வெளியீட்டு வைக்கப்பட்டது. அததுடன் அதிதிகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டதுமுன்னாள் அமைச்சர் ஏ.எச்.பௌசி, பலஸ்தீன் நாட்டின் புதிய துாதுவர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உதுமாலெப்பை பா.உ, காதர் மஸ்தான், தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம். இந்திய பிரநிதிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜகான், மாநிலத் துணைச் செயலாளர்கள் இப்ராஹிம் மக்கி, எம்.ஜே.எம். ஜமால் முஹம்மது இப்ராஹிம், மேலப்பாளையம் அப்துல் ஜப்பார், நெல்லை மாவட்ட தலைவர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன், தென்காசி மாவட்ட செயலாளர் ஏ. சையது பட்டாணி, நெல்லை மண்டல ஒருங்கிணைப்புச் செயலாளர் எம். நயினார் முஹம்மது கடாபி, தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் எஸ்.கே. சாலிஹ், புத்தாநத்தம் ஜமாஅத் நிர்வாக குழு உறுப்பினர் மவ்லவீ சையது அபுதாஹிர் மிஸ்பாஹி, மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள், மற்றும் அதிதிகளும் வழங்கப்பட்டது.மாநாட்டில் சிங்கப்பூர் ராயல் கிங்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஹாஜி சிராஜூதீன் தனது சொந்த நிதியில் இருந்து தலா 25000 வீதம் நலிவடைந்த மூத்த ஊடகவியலாளர் 15 பேருக்குசுகாதார, மற்றும் ஊடக தொலைத்தொடர்பு அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் இஹாப் ஐ. எம். கலீல்,அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜகான், மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் வழங்கினார்கள். இந்த நிகழ்வில் மனித நேய கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹருல்லா எழுதிய “நபிதுமாகே சமாஜ சம்பந்ததா” நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு (மொழிபெயர்ப்பு: சைன் பாசில்) வெளியிடப்பட்டது.அதோடு, அமைப்பின் வருடாந்திர சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)


