தனியார் பஸ்களில் பயணச் சீட்டு வழங்கும் நடைமுறை நாளை முதல் மேல் மாகாணத்தில் அமுல்.

மேல் மாகாணத்தில் தனியார் பஸ்களில் பயணிப்பவர்களுக்கு பயணச் சீட்டுகளை வழங்குவது புதன்கிழமை (01) முதல் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண வீதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாகாண பஸ் வலையமைப்பிற்குள் பொறுப்புக்கூறல் மற்றும் சேவை தரங்களை மேம்படுத்துதல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் காமினி ஜாசிங்க தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறையானது மேல் மாகாணம் முழுவதும் அமுல்படுத்தப்படுவதுடன் தனியார் பஸ் நடத்துநர்களால் அறவிடப்படும் ஒவ்வொரு கட்டணத்திற்கும் ஒரு பயணச் சீட்டை வழங்குதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.