“சிறுவர் தின சிறப்புக் கவிதை”
சிறுவர் தினம் என்பது வெறும் கொண்டாட்டமல்ல;
ஒவ்வொரு குழந்தையின் கனவையும் காக்கும் பொறுப்பை நினைவூட்டும் நாள்.
அந்தப் பொறுப்பு தொடங்குவது வீட்டிலிருந்தே…” அதையொட்டி இக்கவிதை வருகிறது
“சிதைவு அல்லது செழிப்பு”
‘பொறுப்பிழந்த வீடு’
காயங்களை
விதைக்கிறது,
சண்டையில் சிக்குகிறது,
பிள்ளையின் கனவைக்
கிழிக்கிறது,
சமூகத்தை
புண்பட வைக்கிறது.
‘பொறுப்பிழந்த வீடு’
அழுகையை வளர்க்கும்
நிலமாகிறது,
அச்சத்தை விதைக்கும்
மரமாகிறது,
எதிர்காலத்தை அழிக்கும் காற்றாகிறது ,
‘பொறுப்புள்ள வீடு’
அன்பில் மலர்கிறது,
நேர்மையில் நிற்கிறது,
பிள்ளையின் கனவுக்கு
வேராகிறது,
சமூகத்துக்கு
முன்மாதிரியாகிறது.
‘பொறுப்புள்ள வீடு’
சிரிப்பை விதைக்கும்
நிலமாகிறது,
நம்பிக்கையை வளர்க்கும்
மரமாகிறது,
எதிர்காலத்தை பாதுகாக்கும்
அரணாகிறது,
பொறுப்பை
இழந்தால் சிதையும்
வீடு,
பொறுப்பை
ஏற்றால் செழிக்கும்
நாடு,

அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்