இள வயது கர்ப்பிணிகள் அனுராதபுர மாவட்டத்தில் அதிகரிப்பு.
அனுராதபுரம் மாவட்டத்தில் சிறுவயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அனுராதபுரம் மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி குழுவினர் தெரிவித்தனர்.
கல்வி நடவடிக்கைகளுக்காக சிறுவர்கள் சிறுவயதில் இணையத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சிறுவயது கர்ப்பம் அதிகரித்துள்ளதாக குழுவினர் அதிகாரிகள் தெரிவித்தனர்.சிறுவர்களிடையே கையடக்க தொலைபேசி பயன்பாட்டை ஒழுங்கு படுத்துதல் விசேட தேவைகள் உள்ளவர்களுக்கு கல்வியை மேம்படுத்துதல் வேண்டும்.
யுனிசெப் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மாவட்டத்தில் உள்ள ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான ஊட்டச்சத்து திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் குழுவினர் தெரிவித்தனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )