முல்லைத்தீவு செல்லும் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (02) முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி இதன்போது ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அத்துடன், தென்னை முக்கோண வலயப் பணிகளையும் அவர் ஆரம்பித்து வைப்பார்