ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்திற்கு அனுமதி
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஒலுவில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியிலிருந்து ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்திற்கான காணியினை வழங்குவதற்கு காணி சீர்திருத்தக் குழுவின் தலைவர் ஆர்.கே.நிஹால் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அண்மையில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே.நிஹாலை சந்தித்து ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்திற்கான காணியினை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(கே. எ. ஹமீட் )