இலேசான மழை பெய்யும் வாய்ப்பு..!
வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இலேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெற தேவையான முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.