வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று சீ.ஐ.டி.யில் ஆஜராகும் ரணில்..!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க அவரது பதவிக் காலத்தில் அமெரிக்காவிற்கும் பின்னர் இங்கிலாந்துக்கும் பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், இங்கிலாந்து பயணத்தின் ஒரு பகுதி தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அரச நிதியில் இருந்து நிதியளிக்கப்பட்டதாகவும், ரூ. 16.9 மில்லியன் செலவாகியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது .
விசாரணை தொடர்பான வாக்குமூலம் பெறுவதற்காகவே இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.