தெஹியங்கை சிரேஷ்ட ஆசிரியைக்கு கௌரவம்..!
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த தெஹியங்க ஊரின் இரண்டாவது சிரேஷ்ட ஆசிரியையாக அடையாளப்படுத்தப் பட்ட ஆசிரியை ஜெ. ஜெஸீமா உம்மா கௌரவிக்கப்பட்டார்.
கலாபூஷணம் அரபா மன்சூர் எழுதிய தெஹியங்க கல்வி வரலாறும்,ஆசிரியர்கள் விபரமும் அடங்கிய தீபங்கள் நூல் வெளியீட்டு விழா தெஹியங்க அல்அஸ்ஹர் மத்திய கல்லூரியில் நடைபெற்றதையடுத்தே இந்த சிரேஷ்ட ஆசிரியரும் கௌரவிக்கப்பட்டார்.
இந்த கௌரவிப்பு நிகழ்வு தெஹியங்கையிலுள்ள ஆசிரியையின் இல்லத்திலேயே இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலாபூஷணம் அரபா மன்சூர், ஜனாபா அனஸ், தேசமான்ய பாரா தாஹிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
(ரஷீத் எம். றியாழ்)