சிங்கப்பூரின் டிஜிட்டல் மேம்பாடு தகவல் அமைச்சு அதிகாரிகளுடன் சஜித் பிரேமதாச கலந்துரையாடல்..!
இலங்கையின் நிர்வாக கட்டமைப்பு, அரசப் பணி உட்பட முழு செயல்பாட்டையும் டிஜிட்டல்மயமாக்குவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) சிங்கப்பூரின் டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் அமைச்சிற்கு (Ministry of Digital Development and Information of Singapore) சென்றார். தற்பொழுது சிங்கப்பூருக்கு மேற்கொண்டிருக்கும் சுற்றுப்பயணத்தின் போது இந்த நிகழ்வு நடந்தது. இதன்போது “ஸ்மார்ட் நேஷன்” ஆக மாறுவதற்கான சிங்கப்பூரின் முன்னோடி பயணம் பற்றிய விரிவான கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்றார்.
இந்த சந்தர்ப்பத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுடன் Brandon LOH (Deputy Director – International Affairs division), Ryan Goh (Assistant Director – International Affairs division) மற்றும் Lynette kwok (Deputy Director – GovTech) ஆகியோரும் பங்கேற்றனர்.
🟩 Smart Nation 1.0 மற்றும் 2.0
2014 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங்கின் தலைமையில் தொடங்கப்பட்ட Smart Nation 1.0 உடன் ஆரம்பமான சிங்கப்பூரின் டிஜிட்டல் உத்தி புரட்சியின் பரிணாம வளர்ச்சி இங்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில் அரசாங்கமும் சமுதாயமும் டிஜிட்டல் மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்த விதம் குறித்து ஆய்வு செய்ய முடிந்தது. இதில் டிஜிட்டல் புதுமையை (digital innovation) வேகப்படுத்துவதற்கும், உள்ளடக்குவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் மற்றும் அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பத்தை ஆழமாக ஒருங்கிணைப்பதற்கும் முயற்சி செய்யும் பிரதமர் லாரன்ஸ் வொங் 2024 இல் அறிமுகப்படுத்திய Smart Nation 2.0 பற்றியும் அவர் இதன்போது கலந்துரையாடினார்.
🟩 பிரதான நிறுவனங்கள் மற்றும் முன்முயற்சிகள்
சிங்கப்பூரின் டிஜிட்டல் சூழல் முறைமையை நெறிப்படுத்தும் பல பிரதான நிறுவனங்களின் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தனது கலந்துரையாடல்களில் எடுத்துக்காட்டினார்.
அதற்கமைய:
- தகவல் ஊடக அபிவிருத்தி அதிகாரசபை (Infocom Media Development Authority – IMDA) – டிஜிட்டல் தொழில்களின் வளர்ச்சி மற்றும் புதுமையின் மேற்பார்வை. • சைபர் பாதுகாப்பு நிறுவனம் (Cyber Security Agency -CSA) – சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல்.
- அரசாங்க தொழில்நுட்ப நிறுவனம் (Government Technology Agency -GovTech) – அரசாங்க சேவைகளுக்கான டிஜிட்டல் தீர்வுகளில் முன்னணியில் செயல்படுகிறது.
- தேசிய நூலக சபை (National Library Board -NLB) – டிஜிட்டல் அறிவு பகிர்வு மற்றும் அணுகலை ஊக்குவித்தல்.
🟩 GovTech
குடிமக்கள் மற்றும் வணிகங்களுக்காக டிஜிட்டல் சேவைகளைத் திட்டமிடுதல் மற்றும் வழங்குவதில் மையப் பொறுப்பை வகிக்கும் GovTech இன் செயல்பாடுகள் மீது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை தனது அரசப் பணி வழங்கலை நவீனப்படுத்தவும், தொழில்நுட்பம் அடிப்படையிலான ஆட்சியைத் தழுவவும் முயற்சிக்கும் போது, தேசிய டிஜிட்டல் அடையாள முறைமைகளில் இருந்து AI-இயக்கும் அரசாங்க தளங்கள் (AI-driven government platforms) வரை GovTech இன் முன்முயற்சிகள் இலங்கைக்கு மதிப்புமிக்க கற்றுக்கொண்ட பாடங்களைப் பெற்றுக் கொடுக்கும் என்று இங்கு குறிப்பிட்டார்.
🟩 இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை வலுப்படுத்துதல்.
இலங்கையின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், அரசாங்கக் கொள்கைக்கு வலுவான, பாதுகாப்பான மற்றும் குடிமகன் சார்ந்த தொழில்நுட்ப கட்டமைப்பின் மூலம் ஆதரவளிப்பதை உறுதி செய்வதற்கும் தேவையான அறிவைப் பெறுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இந்தப் பயணத்தில் பங்கேற்றார். சிங்கப்பூரின் அனுபவங்களில் இருந்து இலங்கைக்கு வெளிப்படையான, வினைதிறனான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான ஆட்சி அமைப்பைக் கட்டியெழுப்ப உதவும் என்று இங்கு வலியுறுத்தினார்





