தென்இந்திய இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி ஹைதர் அலி மிஸ்பாஹி இலங்கை விஜயம்..!
மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெரும் மீலாதுன் நபி விழாக்களில் விசேட சொற்பொழிவாற்றுவதற்காக தென்இந்தியாவைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞரும் இந்திய மேளப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரி முதல்வருமான
மௌலவி அல்ஹாஜ் அல் உஸ்தாத் எஸ்.எஸ் ஹைதர் அலி ( மிஸ்பாஹி) எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.
புனித ரபியுல் அவ்வல் மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் சீனன் கோட்டை ஜாமியதுல் பாஸியத்துஷ் ஷாதுலிய்யா கலாபீட த்தில் தினமும் 12 நாட்கள் இரவு நடைபெறும் புனித ஸுப்ஹான மவ்லூத் மஜ்லிஸின் விசேட உரையாற்றுவார்.
அத்தோடு சீனன் கோட்டை பிடவலை அல் மிர்அதுஷ் ஷாதுலியா ஸாவியாவில் நடைபெறும் 93வது வருட புனித ஸஹீஹுல் புகாரி பராயன மஜ்லிஸிலும் இவர் சொற்பொழிவாற்றவுள்ளார்.
மேலும் சீனன் கோட்டை பகுதியிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் ஷாதுலிய்யா ஸாவியாக்களில் நடைபெரும் வருடாந்தம் புனித ஸுப்ஹான மவ்லூத் மஜ்லிஸ்களிலும் மௌலவி ஹைதர் அலி மிஸ்பாஹி இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உயரிய வாழ்க்கை வரலாறு தொடர்பில் உரையாற்றவுள்ளார்
(பேருவளை பீ.எம்.முக்தார்)