அ.இ.மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்..!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று, கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில், நேற்று மாலை (20) வெள்ளவத்தை, கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது.
கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன், பாராளுமன்ற உறுப்பினர்களான முத்து முஹம்மத், அஷ்ரப் தாஹிர் மற்றும் கட்சியின் அரசியல் அதிகாரபீட உறுப்பினரான ரியாஸ் சாலி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மேற்படி கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராகவும் மாவட்டக் குழுத் தலைவராகவும் சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், கொழும்பு மாவட்ட செயலாளராகவும் தெஹிவளை – கல்கிஸ்சை அமைப்பாளராகவும் மொஹமட் ரிஸ்வான், மத்திய கொழும்பு இணை அமைப்பாளர்களாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நிலார் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் நௌஷாட், வட கொழும்பு அமைப்பாளராக முன்னாள் மாநகர சபை உறுப்பினர் நைசர் ஹாஜியார், கொலொன்னாவை பிரதேச இளைஞர் அமைப்பாளராக ரிஸ்மி, ஆகியோர் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால் நியமனக்கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்