தர்கா நகரில் சிறப்பாக நடைபெற்ற இரட்டைப் படைப்பு நூல் வெளியீட்டு விழா..!
தர்கா நகரைச் சேர்ந்த இளங்கலைப் பட்டதாரியான பஸ்மா ரிம்ஸான் என்ற மாணவியின் கன்னி முயற்சியான “இரட்டைப் படைப்பு;” சிறுகதை மற்றும் கவிதைத் தொகுப்பு நூலின் வெளியீட்டு விழா நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவின் பிரதம அதிதியாக நஜீப் ஹாஜியார் கல்வி நிலையத்தின் ஸ்தாபகர்; கலாநிதிஇ தேசமான்யஇ சமூக சேவையாளர் அல்-ஹாஜ் முஹம்மத் நஜீப் பின் அமீர் ஆலிம் பிரதம அதிதியாகவும் சிரேஷ்ட துறை வல்லுனர் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம்இ எம்.பி.ஏ மனித வள மேலாண்மைஇ பி.பி.ஏ இஸ்லாமிய நிதி மற்றும் வங்கித் துறை மேலாண்மைத் துறை டிப்ளோமா தாரி அல் ஹாஜ் முஹம்மத் நிஹ்மதுல்லாஹ் நஜீப் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இந்நூலாசிரியரின் தந்தையான ரிம்ஸான் பாரூக் வரவேற்புரை நிகழ்த்தியதோடு ரம்ஸியா முனாஸ் நூல் அறிமுகம் செய்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் எம.எஸ்.எம் அஸ்லம்இ பேருவளை பிரதேச சபைத் தலைவர் பைஸான் நைஸர்இ இலங்கை வங்கி இந்தியா கிளையின் முன்னாள் முகாமையாளரும் பிரபல கவிஞரும் எழுத்தாளருமான தர்கா நகர் ரீ.எம் ஸபாஇ அல் ஹம்ரா மகா வித்தியாலய முன்னாள் அதிபர் எம்.இஸட்.எம் நயீம்இ டாக்டர் முஹம்மத் இஹ்ஸான்இ பேருவளை உதைப் பந்தாட்டச் சங்க பொருளாலர் ஏ.ஜே.எம் அக்பர்இ அல் ஹம்ரா மகா வித்தியாலய அதிபர் பஸ்லியா பாஸி உட்பட எழுத்தாளர்கள்இ கவிஞர்கள்இ கலைஞர்கள்இ ஊடகவியலாளர்கள்இ பேருவளை நகர சபைஇ பேருவளை பிரதேச சபை ஊழியர்கள்இ மற்றும் பெருமளவிலான ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக பட்டதாரி மாணவியான பஸ்மா ரிம்ஸானின் இந்த முயற்சியை இங்கு உரையாற்றிய பலரும் பாராட்டிப் பேசினர். எதிர்காலத்திலும் நல்ல பயனுள்ள நூல்களை வெளியிட வேண்டும் என்றும் இவரது பணிக்கி நல்லுள்ளம் படைத்த அனைவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்று கலாநிதி நஜீப் ஹாஜியார் பின் அமீர் ஆலிம் குறிப்பிட்டார்.
இந்த மாணவி தரம் 5 புலமைப் பிரிசில் பரீட்சையில் சித்தியடைந்து இதே கல்வி நிலையத்தில் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டதை சாபகமூட்டிய கலாநிதி நஜீப் ஹாஜியார் இன்று பல்கலைக்கலகம் சென்று உயர் கல்வியை தொடர்கிறார். அவரின் இந்த பாரிய முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். இவ்வாறான இளம் எழுத்தாளர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கப்பட வேண்டும் என்றார்.
நூலின் முதல் பிரதியை நூலாசிரியர் மற்றும் அவரது பெற்றோர் இணைந்து பிரதம அதிதி கலாநிதி நஜீப் ஹாஜியார் மற்றும் அவரது மனைவி ஆகியோரிடம் வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
(பேருவலை பீ.எம்.முக்தார்)





