உள்நாடு

சாய்ந்தமருது அஹ்லுஸ் ஸுன்னா வல் – ஜமாஅத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும்..!

சாய்ந்தமருது அஹ்லுஸ் ஸுன்னா வல் – ஜமாஅத் உலமா சபையின் பொதுக்கூட்டமானது சாய்ந்தமருது அக்பர் ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.

இப்பொதுக் கூட்டத்தின் போது புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. அதன்படி புதிய நிர்வாகிகளாக பின்வருவோர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

சாய்ந்தமருது அஹ்லுஸ் ஸுன்னா வல் – ஜமாஅத் உலமா சபையின் புதிய தலைவராக சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பேஷ்இமாம் மௌலவி அல்ஹாஜ் எம்.ஐ.ஆதம்பாவா (ரஷாதி), செயலாளராக ஆசிரியர் மௌலவி அல்ஹாஜ் எம்.எஸ்.எம். அப்துல் ரஹீம் (நுழாரி), பொருளாளராக முல்தஸம் ஹஜ் டரவல்ஸ் மௌலவி அல்ஹாஜ் எம்.எஸ்.எம். ஸுஹுறுத்தீன் (ஷர்கி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதோடு, பிரதித் தலைவர்களாக ஓய்வுபெற்ற ஆசிரியர்களான மௌலவி அல்ஹாஜ் எஸ்.எம். அஹமட்லெவ்வை (ஷர்கி), மௌலவி அல்ஹாஜ் ஐ.எல்.அஹமட் (ஷர்கி) மற்றும் பொத்துவில் நூறுல் ஹுதா அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் மௌலவி அல்ஹாஜ் ஏ.எல்.என். முஹம்மட் (ஷர்கி) ஆகியோரும் உப செயலாளராக, சாய்ந்தமருது அக்பர் ஜும்ஆப் பள்ளிவாசலின் பேஷ்இமாம் மௌலவி எஸ்.எச்.எம். இம்தியாஸ் (பாதுபி), உப பொருளாளராக, மௌலவி அல்ஹாஜ் ஏ.எம். நவாஸ் (மன்பயி) ஆகியோரும் ஆலோசகர்களாக, மௌலவி அல்ஹாஜ் எஸ்.எம்.ஜே. புவாத் (அத்லி), மௌலவி ஏ.எல்.எம். நஸீர் (நஜாஹி), மௌலவி எம்.எம். ஜாபிர் (வாதுபி), மௌலவி எம்.என். நாஸிக் அஹமட் (ஸாலிஹி) உட்பட மேலும் பல உலமாக்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *