பஸ் உரிமையாளரின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச போக்குவரத்து சேவை..!
பஸ் உரிமையாளரின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச பயணிகள் போக்குவரத்து சேவை ஒன்று இன்று (19) கண்டியில் இடம்பெற்றது.
கண்டி மடவளை வழியாக திகன நகருக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் போக்குவரத்து சேவை உரிமையாளர் ஒருவர் தனது 73 வது பிறந்தநாளை முன்னிட்டே இந்த இலவச சேவையை நடத்தினார்.
.பயணிகள் பஸ்ஸில் ஏறிய பின்னர் பஸ்ஸில் தொங்க விடப்பட்டிருந்த பதாகை மூலமாகவே இந்த பஸ் சேவை இலவச பஸ் சேவை என்பது பற்றி பயணிகள் தெரிந்துகொண்டனர். இச் சசம்பவம் பயணிகளுக்கு அதிர்ச்சியூட்டீயமை குறிப்பிடத்தக்கது.
(ரஷீத் எம். றியாழ்)