உள்நாடு

வெகு சிறப்பாக நடைபெற்ற உஸ்தாத் அகார் முஹம்மதின் 100 வாழ்க்கைப் பாடங்கள் நூல் வெளியீட்டு விழா..!

ஜாமியா நளீமியா வின் அதிபர் உஸ்தாத் ஏ.ஸீ.அகார் முஹம்மத் அவர்கள் எழுதிய 100 வாழ்க்கைப் பாடங்கள் எனும் இஸ்லாமிய அறிவு நுால் வெளியீட்டு விழா மிக சிறப்பாகவும் நேர்த்தியாகவும் 06.08.2025 பி.எம்.ஜ.சி.எச் ல் நடைபெற்றது.

நூலின் முதல் பிரதியை சம்.சம் பவுண்டேசன் தலைவர் அஷ் ஷேக் யூசுப் முப்திக்கு வழங்கப்பட்டது.
மற்றும் பௌஸ் ஹாஜி , அகார் முஹம்மத் அவர்களின் சகோதரருக்கு ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷேக் அர்ஹம் ஆகியோர்களுக்கு மட்டுமே நுால் ஆசிரியரின் மேடையில் வைத்து நூல்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வுக்கு வருகை தந்த அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் துாதுவர்கள் கல்விமான்கள் , ஜாமியா மாணவர்கள் மண்டபம் நுழைவாயில் வைத்து 1500 ரூபா வழங்கி நுால் பிரதிகளை பெற்றுச் சென்றமை காணக்கூடியதாக இருந்தது.

இங்கு வரவேற்புரையை ஜாமியா நளீமியா பழைய மாணவர் அஷ்ஷேக் ராசிக் , நூலின் விமர்சனம் உரையை இஸ்லாம் மற்றும் சுகாதார விரிவுரையாற்றும் சிறுவர் வைத்திய நிபுணர் டாக்டர் ரைஸ் முஸ்தபா நுால் ஆசிரியர் ஏற்புரையையும் நிகழ்த்தினார். தமிழ் நாட்டுப் பேராசிரியர்கள் இரத்தன சுருக்க உரை நொலேஜ் பொக்ஸ் ஊடகத்தினால் திரையில் காண்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதியமைச்சர் முனீர் முளப்பர், பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், காதர் மஸ்தான், முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் , முன்னாள் பா. உ அமீர் அலி, எம்.எம்.சுஹைர் , பேராசிரியர் சித்தீக், ஜாமியா நளீமியா தலைவர் யாக்கூத் நளீம் மற்றும் ஜாமியா நளீமியா விரிவுரையாளர்கள் பழைய மாணவர்களும் உலமாக்களும் ஊடகவியலாளர்களும் மண்டபம் கீழ் மாடியில் மேல் மாடியில் நிரம்பிக் காணப்பட்டனர்.

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *