Wednesday, July 15, 2026
Latest:
உள்நாடு

வணிகத் திறன் அபிவிருத்தி சமூக வலுவூட்டல் செயலமர்வு

வணிகத் திறன் அபிவிருத்தி தொடர்பான பிரஜைகளை வலுவூட்டும் வேலைத் திட்டம் சம்பந்தமான உத்தியோகத்தர்களை அறிவூட்டும் செயலமர்வு சமுர்த்தி
அபிவிருத்தி திணைக்களத்தினால் மாவட்டங்கள் தோறும் நடாத்தப்படுகிறது அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மேற் படி வேலைத்திட்டம் நடைபெறுகிறது அதற்கமைவாக 2025.06.18 ம் திகதி அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் உதவிப் பிரதேச செயலாளர் வை.ராசித். அவர்களின் பங்குபற்றலுடன் திட்ட முகாமையாளர் என்.ரி.மசூரின் தலைமையில் திட்ட உதவியாளர் முஹாஜிரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.

இதில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வளவாளர்களாக அம்பாறை மாவட்ட சமுர்த்தி உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர் இஸட்.அப்துர் றகுமான், சம்மாந்துறை தலைமைப் பீட சமூர்த்தி முகாமையாளர் எம்.பி எம்.ஹுசைன் மற்றும் இறக்காமம் சமூர்த்தி வங்கி முகாமையாளர் எம்.ஏ.ஏ.நஜீம் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரை நடாத்தினர்.

(இஸட். ஏ. றஹ்மான்
ஒலுவில் விசேட செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *