கொழும்பு மா நகர மேயராக வ்ராய் கெலி பல்தசார பதவியேற்பு
கொழும்பு மாநகர சபையின் 26ஆவது மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலி பல்தசார் சற்று நேரத்திற்கு முன்பு பதவியேற்றார்.
திங்கட்கிழமை (16) மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.கே.ஜெயசுந்தர தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக வ்ராய் கெலி பல்தசார் தெரிவு செய்யப்பட்டார்.
இரகசிய வாக்கெடுப்பின் போது, தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலி பல்தசார் 61 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தியின் ரீஸா சரூக் 54 வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.