உலகம்

அவுஸ்திரேலியாவில் 6.1 ரிச்டரில் நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்பகுதியில் இன்று (08) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 4.50 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 47.76 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 116.05 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த சக்தி வாய்ந்த நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *