மினா வந்த ஹாஜிகள் வணக்க வழிபாடுகளில் பங்கேற்பு; ஹாஜிகளை மகிழ்விக்கும் அல் பைத்தின் உணவுகள்
புனித ஹஜ் கடமைக்காக மக்கா மதீனா போன்ற இடங்களுக்கு வந்துள்ள ஹாஜிகள் நேற்றைய தினம் மினா வந்து அங்குள்ள கூடாரங்களில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் இன்று தினம் அறபா மலையடிவார மைதானத்துக்கு செல்கின்றனர்.
குறிப்பாக மினாவில் இம்முறை இலங்கை ஹாஜிகள் அனைவரையும் சோன் 2 என்ற பகுதியில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான உணவு வசதிகளை அல் பைத் நிறுவனம் செய்துள்ளது.
எந்தவித குறைபாடுகளுமின்றி ஒருவர் எந்த நேரமும் விரும்பிய அளவில் உண்ணுவதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.










(மினாவில் இருந்து
ஏ.எஸ்.எம்.ஜாவித்)