உள்நாடு

மட்டு montana நிறுவனத்துக்கு Emerging startup விருது; எமக்குக் கிடைத்த மிகப் பெரும் அங்கீகாரம்; நிறுவன ஸ்தாபகர் கருத்து

SLCBC Regional excellence Awards- 2025 நிகழ்வானது கடந்த மே 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் J Hotel இல் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்திற்கான Emerging Startup Award விருதானது மட்டக்களப்பு நகரில் இயங்கி வரும் Montana நிறுவனத்தினருக்கு கிடைக்கப்பெற்றது.
இதில் கருத்து தெரிவித்த நிறுவனத்தின் ஸ்தாபகர்
“இந்த அங்கீகாரம் எங்கள் நிறுவனத்தின் முதலாவது மைல்கல்லைக் கடந்ததை உணர்த்துகிறது. எமது நிறுவனத்தின் தொடக்க நாளிலிருந்து குறுகிய காலத்திற்குள் பெறப்பட்ட இந்த முதல் விருதானது எங்கள் குழுவின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் புதிதுபுனைவதற்கான இடைவிடாத முயற்சிக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளதை நினைத்து நாம் பெருமிதம் அடைகிறோம்.” என குறிப்பிட்டார்.

இலங்கை முழுவதும் வளர்ச்சி, திறமை மற்றும் பிராந்திய ஆளுமைகளைக் கொண்டாடும் இத்தகைய ஒரு ஊக்கமளிக்கும் தளத்தை ஏற்பாடு செய்தமைக்காக Srilanka – Canada Business council (SLCBC) மற்றும் Ceylon Chamber of Commerce இற்கு தனது நன்றிகளை தெரிவித்த அவர், இந்த அர்த்தமுள்ள விருதை தமது கரங்களுக்கும் சாத்தியமாக்கிய அனைத்து ஆதரவாளர்களுக்கும் நிறுவனத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், கிழக்கு மாகாணத்திலிருந்து வளர்ந்துவரும், ஆற்றல் நிறைந்த தொழில்முனைவோர்களுக்கென வழங்கப்பட்ட இந்த SLCBC REGIONAL EXCELLENCE AWARDS ஆனது, மேலும் ஒரு உந்துதலை எமது நிறுவனத்திற்கு வழங்கியுள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும். MONTANA வின் தொலைநோக்கு பார்வை, அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சி ஆகியவை இந்த வெற்றிக்குப் பின்னால் உள்ள உந்து சக்திகளாகும் எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *