அனுராதபுர மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இலங்கை இந்திய சவுத்தி தின நிகழ்வு
தன்னார்வக் கல்வியின் மூலம் சமூகத்தை மேம்படுத்தும் நோக்கில் இயங்கும் சவுத்தி கவிதைச் சங்கத்தினால் இந்தியா இலங்கை சவுத்தி தினம் எனும் நிகழ்ச்சி (26) அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இந்தியாவின் பிரபல உருதுக் கவிஞர் பேராசிரியர் மொகமட் மஸ்ஹூத் அஹமட் தலைமையில் நடைபெற்றது.
இங்கு பேராசிரியர் மஸ்ஹூத் உருது கவிதையின் தன்மையை அவரது கவிதைகளை எடுத்துக்காட்டி விளக்கினார்.தலைமை நிர்வாகம் போன்ற வற்றிற்கு நல்லது அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
இந்நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள திறமையான கலைஞர்கள் கவிதை மற்றும் பாடல்களை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் கிடைத்தது .
இதன்போது அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழிக் கற்கை துறைத் தலைவர் கலாநிதி அமரசிறி விக்கிரமரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)