கனேமுல்ல சஞ்சீவ கொலையின் பின்னால் அரசியலா?
நாட்டில் ஆங்காங்கே மீண்டும் பல கொலைகள் நடந்துள்ளன. மிகவும் முக்கியமான கொலை 2025.02.19 ஆம் திகதி காலை கொழும்பு புதுக்கடையில் அமைந்துள்ள 05 ஆம் இலக்க நீதிமன்ற கட்டிடத்தினுள் நீதிபதியின் முன்னால் நடைபெற்றிருக்கின்றன. இந்த படுகொலைச் சம்பவத்துடன் முழு நாடும் அதிர்ந்து போய் இருக்கின்றது. கொல்லப்பட்டவர் பாதுகாப்புத்துறைக்கு மிகவும் அவசியமான அதுவும் பூசா தடுப்பு முகாமில் இருந்து மூன்று வழக்குகளுக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிரபல்யம் வாய்ந்த பாதாள உலக கோஷ்டி உறுப்பினரும், போதைப்பொருள் கடத்தல் பேர்வழியும், பல குற்றச் செயல்களுடன் சம்பந்தப் பட்டவருமான சஞ்சீவ சமரகோன் எனப்படும் கனேமுல்ல சஞ்சீவ ஆவார்.
இவரை திட்டமிட்ட அடிப்படையில் சட்டத்தரணி போன்று வேடம் தரித்த ஒருவர் மன்றுக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டு தீர்த்துக் கட்டினார். ஆனாலும் புலனாய்வு துறையினர் அதே நாளில் சுமார் 05 மணித்தியாள இடைவெளிக்குள் சஞ்சீவ வை துப்பாக்கியால் சுட்டவரை சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.
துப்பாக்கிதாரியும் அவருக்கு உதவிய காதலியும் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கான திட்டத்துடன் புத்தளம் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது கைது செய்துள்ளனர். இதுவரையில் இந்த கொலையுடன் தொடர்புடைய 08 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய பயங்கரவாத தடைச் சட்ட விதிகளின் அடிப்படையில் 03 மாத காலம் வரை தடுத்து வைக்கும் உத்தரவுடன் மேலதிக விசாரணைகள் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இவ்வாரத்திற்குள் மித்தெனிய பகுதியில் அருண பிரியந்த விதானகே என்ற நபர் அவரது இரண்டு பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிலில் சென்று கொண்டிருந்த போது இனம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த கொலையும் பாதாள உலக கோஷ்டி விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட வஞ்சம் தீர்க்கும் வகையிலான கொலைகள் என்று பொலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் 2025.02.21 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் இரவு நேரத்தில் தொலைபேசி விற்பனை கடையொன்றுக்குள் துப்பாக்கியால் ஒருவர் சுடப்பட்டு கொல்லப்பட்டார். அந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட இரண்டு பேரை பொலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர். ஆனாலும் அவர்கள் இருவரும் மறுநாள் காலையில் பொலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி கொல்லப்பட்டனர். அவர்கள் மறைத்து வைத்துள்ள ஆயுதங்களை பொலீசாருக்கு காண்பிப்பதற்காக சென்ற போது பொலீசாரின் துப்பாக்கியை பரித்தெடுப்பதற்காக முற்பட்ட போது பாதுகாப்புக்காக பொலீசார் சுட்டதில் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர்.
இதுபோன்ற சம்பவங்கள் இந்த நாட்டில் புதிதாக நடக்கும் சம்பவங்கள் அல்ல. ஏற்கனவே பல முறை இத்தகைய கொலைகள் நடைபெற்றுள்ளன. நீதிமன்ற வளாகத்திற்குள் இதற்கு முன்னரும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கின்றது. அதே போன்று கைது செய்யப்பட்டவர்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயதங்களை பொலீசாருக்கு காண்பிப்பதற்காக அழைத்து செல்லப்பட்டவுடன் அங்கே பொலீசாருடன் இடம்பெறும் மோதலில் ஆயுதம் காண்பிப்பதற்காக அழைத்து செல்லப்படும் சந்தேக நபர்கள் பொலீசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலியாகி இருக்கின்றனர்.
இவ்வாறு பாதுகாப்பு கடுமையாக இருந்தும் கொலைகாரர்கள் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் சூட்சுமமான முறையில் உள்ளே புகுந்து காரியம் சாதிக்கும் அளவிற்கு எங்கு தவறு நடக்கின்றது. இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இவ்வாறான கொலைகளால் எதிர்பார்ப்பது என்ன? இவ்வாறான படுகொலைகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்ற பல வினாக்கள் எழுகின்றன.
தற்போது கனேமுல்ல சஞ்சீவ கொலையின் பின்னால் வேலியே பயிரை மேயும் வகையில் பணத்திற்காக வேலை செய்யும் ஒரு சில பொலீஸ் உத்தியோக த்தர்களும் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களும் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணை களில் இருந்து தெரிய வந்திருக்கின்றது.
பார்த்த பார்வையில் பாதாள உலக மற்றும் போதைப் பொருள் வியாபார கும்பல்களுக்கு இடையில் நடைபெறும் போட்டி மோதல் காரணமாக பழி வாங்கும் நோக்கில் இவ்வாறான கொலைகள் நடப்பதாக பொலீஸ் புலன் விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் குற்றவாளி இவ்வாறாக விசாரணைகள் முடிந்து தண்டனை வழங்கப்பட முன்னர் திடீர் என சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்களை பார்க்கும் போது பலவிதமான சந்தேகங்கள் ஏழுகின்றன. இந்த கொலைகளின் பின்னால் பிரபலமான அரசியல் வாதிகள் இருக்கின்றார்களா? அவர்கள் பற்றிய உண்மைகள் வெளிப்படலாம் என்ற காரணத்தால் விசாரணைகள் பூரணமடையும் முன்னரே உள்ளே இருந்து திட்டமிட்ட அடிப்படையில் தீர்த்துக் கட்டப்படுகின்றார்களா என்ற சந்தேகங்கள் உள்ளன.
மித்தெனியவில் கொலை செய்யப்பட்டவர் தொடர்பாக பொதுஜனபெரமுனவுடன் சம்பந்தப்படுத்தி அவ்வாறான பேச்சுக்கள் அடிபடுகின்றன.
இந்த சங்சீவ கொலை செய்யப்படாமல் இருந்தால் இன்னும் ஏரளமான ரகசியங்கள் விடயங்கள் வெளிவந்திருக்கலாம். இந்த அரசாங்கம் இவ்வாறான கொலை கலாசா ரத்தையும், பாதாள உலக நடவடிக்கைகளையும், போதைப்பொருள் பரிகரணத் தையும் முற்றாக ஒழிப்பதாக தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதி வழங்கி இருக்கி ன்றது. அவ்வாறாயின் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்னர் உண்மைகள் வெளிப்படலாம் என்ற அச்சம் காரணமாக சம்பந்தப்பட்ட ஒவ்வொருவராக தீர்த்து கட்டப்படுகின்றார்கள என்ற கேள்வி எழுகின்றது. அவ்வாறே கொட்டாஞ்சேனை சம்பவத்துடன் தொடர்புடைய கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள் இரவு முழுவதும் பொலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக இருந்து அதிகாலையில் ஆயுதம் காண்பிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட இடத்தில் கொல்லப்பட்டனர்.
ஆனாலும் பொலீசாருக்கு எற்கனவே இவ்வாறு ஆயுதம் காண்பிக்க போனால் அந்த இடத்தில் மோதல் நடக்கலாம் என்ற முன்கூட்டிய அனுபவம் இல்லையா? அல்லது அதுபற்றிய சிந்தனை இல்லையா? இருந்திருந்தால் கைவிலங்கு போட்டு சுடப்பட வேண்டிய நிலை ஏற்படாதவாறு அழைத்துச் சென்றிருக்கலாமே. இவ்வாறு ஸ்தலத்தில் கொல்லப்பட்டதால் அவர்களிடம் இருந்து கிடைக்க வேண்டியப பல முக்கியமான தகவல்கள் இல்லாமல் போய்விட்டதே என்ற கவலை ஏற்படுகின்றது. அவ்வறாயின் இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் ஏதோ அரசியல் தொடர்புகள் இருக்கலாம். அதன் காரணமாகத்தான் மேலதிக கதவல்கள் வெளிப்பட முன்னர் இவ்வாறாக கொல்லப்படுிம் சம்பவங்கள் நடக்கின்றன என்று கருத இடமிருக்கின்றது.
இத்தகைய கொலைகள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கின்றது என்ற குற்றச்சாட்டுக்களும் மன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்த சஞ்சீவ கொலையுடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு இல்லை, நீக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை மீண்டும் நியமித்து முன்னாள் ஜனாதிபதி உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களது பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கையில் இவ்வாறான படுகொலைகள் தேசிய பாடுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கின்றது என்று அரசாங்கம் மீது விரலை நீட்டி இருக்கின்றார்.
ஆனாலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா, பிரதமரி ஹரினி அமரசூரிய ஆகியோர் இத்தகைய கொலைகளால் தேசிய பாதுகாப்புக்கு எத்தகைய அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். அத்துடன் நாட்டில் 56 பாதாள உலக கோஸ்டிகள் இயங்கி வருவதாகவும் அந்த குழுக்களுடன் சம்பந்தப்பட்டவர்களாக 1500 இற்கும் மேற்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் உாயி காலத்தில் அவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்றும் அரசாங்க தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எதுவானாலும் நாட்டில் அரசியல்வாதிகளே பாதாள உலக கோஷ்டிகள் உறுவாக காரணம் என்பது மக்கள் நன்கு அறிந்த விடயம். பாதாள உலகை உறுவாக்கி போஷித்து வளர்த்துவிட்டு பாதாள மற்றும் போதைப்பொருள் வியாபார கும்பல்களைக் கொண்டே அவர்கள் அழிக்கப்படுவதும் அரபாக இருந்து வருகின்றது.
இவ்வாறான நிலைமைகள் நாட்டின் சட்டம், ஒழுங்கிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைகின்றது. நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடப்பதென்றால் நீதிமன்றத்திற்குள்ளும் , வெளியிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடும் நிலை வேண்டும். குற்றவாளிகள் என்று பிடிக்கப்படுபவர்கள் உாயி முறையில் விசாரணை செய்யப்பட்டு நீண்ட பின்னணிகளைக் கொண்ட குற்றச் சயெல்களை முடிவுக்கு கொண்டு வரும் வரையில் அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். புலனாய்வு நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டு அவர்கள் பாரபட்சம் இல்லாத முறையிலும் பணத்திற்காகவும் போதைப் பொருள் பணத்திற்காகவும் அரசியல் வாதிகளின் தேவைக்காகவும் செயற்படும் சம்பவங்கள் முற்றுப்பெற வேண்டும். அதற்கான உத்தரவாதம் தேசிய மக்க்ள சக்தி அரசாங்கத்தால் வழங்கப்படுவது அவசியமாகின்றது.
(எம்.எஸ். அமீர் ஹூசைன்)
