வாழைத்தோட்ட அல் முனீராவில் குர்ஆன் ஓதி முடித்த மாணவர்களுக்கு கெளரவம்..!
கொழும்பு 12 வாழைத்தோட்டம் அல் மஸ்ஜிதுல் முனீர் மஅல் மத்ரஸாவின் குர்ஆனை ஓதி முடித்த மாணவர்களை கௌரவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிவாசலின் தலைவர் ஜஹாங்கிர் அலி தலைமையில் இடம் பெற்றது.
இதன்போது குர்ஆனை முழுமையாக ஓதி முடித்து வெளியேறும் மாணவர்களினால் மத்தரஸாவின் மத்ரஸா கீதம் பாடப்பட்டதுடன் அந்த மாணவர்களின் ஹஸீதாக்கள், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இஸ்லாமிய பேச்சுக்கள், ஹதீஸ் விளக்கவுரைகள், இஸ்லாமிய கீதங்கள் என்பன சிறப்பாக இடம் பெற்றன.
இதன்போது குர்ஆனை முழுமையாக ஓதி முடித்து வெளியேறும் 24 மாணவர்களுக்கு அதிதிகளால் நினைவுச் சின்னங்கள் அணுவித்து சான்றிதழ்களும் பரிசுப் பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மத்ரஸாவில் நீண்ட காலமாக மாணவர்களுக்கு புனித குர்ஆனை ஓதிக் கொடுத்தும் இஸ்லாமிய பாடங்களை கற்றுக் கொடுத்தும் கடமையாற்றி வரும் உலமாக்கலான அதிபர் மௌலவி எம்.எம்.எம்.ரயிசுதீன் (தீனி), சிரேஸ்ட ஆலோசகர் மௌலவி எம்.ஏ.எம்.சிஹாப்தீன் (தீனி), மௌலவி எம்.ஐ.எம்.முஸம்மில் (பஹ்ஜி), பிரதி அதிபர் மௌலவி எம்.என்.எம்.சிபான்(றிழ்வானி) ஆகியோர் அவர்களின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தியும் நினைவுச்சின்னங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)











