முஸ்லிம் திணைக்கள ஏற்பாட்டில் சுதந்திர தின இஸ்லாமிய சமய நிகழ்வுகள்..!
இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தையொட்டி முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இஸ்லாமிய சமய நிகழ்வினை வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளியில் ஏற்பாடு செய்துள்ளது. நாளைக் காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்வுக்கு பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி ஸாலி தலைமை தாங்குவார். தேசிய ஒருங்கிணைப்பு பிரதியமைச்சர் முனீர் முழப்பர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.