45 ஆண்டுகளுக்குப் பின் அசறிகம பாடசாலையில் மாணவி ஹபீர் றிதா சித்தி.
கடந்த 2024.09.15 ம் திகதி நடைபெற்று இன்று (23) வெளியான 05 ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் அநுராதபுரம் கல்வி வலயத்திற்குட்பட்ட அசறிக்கம முஸ்லிம் வித்தியாலய வரலாற்றில் முதன் முறையாக றாசிக் என்ஹபீர் றிதா என்ற மாணவி சித்தியடைந்துள்ளார்.
அசறிக்கம முஸ்லிம் வித்தியாலய வரலாற்றில் 45 வருடங்களுக்கு பின்னர் றாசிக் என்ஹபீர் றிதா என்ற மாணவி 144 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பாடசாலைக்கும் கிராமத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள இம்மாணவிக்கு அதிபர் ஏ.எம் .நியாஸ் உட்பட வகுப்பாசிரியர் எம்.ஏ.றியாஸ் முகமட் மேலதிக வழிக்ட்டல் ஆசிரியர் ஏ.எம். றியாஸ் உள்ளிட்ட ஆசிரியர் குழாம் மற்றும் அசறிக்கம மக்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)