ஒலுவில் அல்-ஹிறா பாலர் பாடசாலையின் விடுகை விழாவில் மின் அத்தியட்சகர் Z.முஜாஹிதுக்கு கௌரவம்
ஒலுவில் அல் ஹிறா பாலர் பாடசாலையின் 2024 ம் ஆண்டின் மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் விடுகை விழாவும் 2025.01.19ம் திகதி ஒலுவில் அல்-ஹம்றா தேசிய பாடசாலையின் அஸ்ரப் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் ஹிறா பாலர் பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். முக்தார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் அல்-ஹிறா பௌண்டேசனின் ஆரம்பகால உறுப்பினரும் செயலாளருமான Z. முஜாஹித் அவர்கள் இலங்கை மின்சார சபையின் மின் அத்தியட்சகராக (Electrical superintendent) பதவி உயர்வு பெற்றமைக்காக ஹிறா பௌண்டேசன் அமைப்பினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
இவர் ஒலுவில் மண்ணில் மின்னியல் துறையில் முதலாவது மின் அத்தியட்சகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் செய்னுலாப்தீன் கதிஜா உம்மா ஆகியோரின் நான்காவது புதல்வராவார்.
(இஸட்.ஏ.றஹ்மான்)