இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறப்பு.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கலாவெவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியாளர் சம்பத் சமரஜீவ தெரிவித்தார்.
குறித்த பகுதியில் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் பல வான்கதவுகளை திறக்க ஏற்படும் என அவர் தெரிவித்தார்.
அதன்படி நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் 04 அடி உயரத்திலும் நான்கு வான்கதவுகள் 05 அடி உயரத்திலும் நீர் திறக்கப்பட்டு வினாடிக்கு 7100 கனஅடி நீர் கலாஓயாவுக்கு திறக்கப்பட்டுள்ளது.
இதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழே செல்லும் இராஜாங்கனை கிரிபாவ வீதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளதால் அவ்வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்