கொழும்பில் இளம் பெண்ணைக் காணவில்லை
கொழும்பில் கடந்த 9ஆம் திகதி முதல் இளம் குடும்பப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். பாத்திமா வாஸிரா அபூ தாஹிர் எனும் 32 வயதான பெண்ணே கொழும்பு தெமட்டகொடவுக்கு அண்மித்த பகுதியில் இவ்வாறு காணாமல் போனவராவார்.
கடந்த 9ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியேறிய இவர் இந்தச் செய்தி பதிவேற்றும் வரை வீடு வந்து சேரவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தனது தேவையின் நிமிர்த்தம் சில தாள்களை அச்சிட்டுக் கொள்ளும் நோக்கில் தனது சகோதரரின் வர்த்தக நிலையத்திற்குச் சென்ற இவர் இடைவழியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 0777770861, 0727789660, 0777927337, 0718811881 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.