உள்நாடு

வெலிப்பன்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வை.எம்.எம்.ஏ.யின் உதவிக்கரம்

மத்துகம வெலிப்பன்னை கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகள் மற்றும் பாடசாலை சிறுவர்களுக்கு 60க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அகில இலங்கை வை.எம்.எம். ஏ இயக்கத்தின அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் வை.எம்.எம். ஏ வெலிப்பன்னை கிளையினால் உலர் உணவுப் பொருட்கள் , பாடசாலை உபகரணங்கள் வை.எம்.எம்.ஏ யின் தேசியத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அம்ஹர் சரீப் அவர்களின் தலைமையில் வெலிப்பன்னை ரஹ்மானிய முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு வை.எம்.எம். இயக்கத்தின் அனர்த்த முகாமைத்துவ திட்டப் பணிப்பாளர் அன்வர் சதாத் களுத்துறை மாவட்ட வை.எம்.எம். ஏ. பணிப்பாளர் எம். இஸ்மத், வெலிப்பன்னை ரஹ்மான் முஸ்லிம் வித்தியாலய அதிபர் ஏ.ஆர்.எம் ரஹ்மான், வெலிப்பன்னை கிளைத் தலைவர் மொஹமட் அஹ்சன், செயலாளர் மொஹமட் றிப்கான், பொருளாளர் மொஹமட் அஹ்லன் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இப்பிரதேசத்தில் அன்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விதவை குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் மற்றும் வசதி குறைந்த மாணவ மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் புத்தகப் பைகளை வழங்கி வைக்கப்பட்டன.

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *