கம்பஹாவின் சம்பியனாகிய உடுகொட ஜின்னா..!
கம்பஹா லீக் கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் பிரபல அணியான ஜெட்லைனர் அணியை தோற்கடித்து உடுகொட ஜின்னா அணி சம்பியனாகியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பஹா சிரீ போதி அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கமபஹா ஜெட்லைனர் உடுகொட ஜின்னா ஆகிய அணிகள் மோதின.விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரு அணிகளும் பலமாக மோதிக்கொண்டன.ஆட்டத்தின் முதற் பாதியில் இரண்டு அணி வீரர்களும் சளைக்காது போராடியதால் கோல்களைப் பெறும் வாய்ப்புக் கிட்டவில்லை. இரண்டாம் பாதியில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிக் காட்டிய ஜின்னா அணியினர் ஒருகோலைப் பெற்று சம்பியனாகினர். இறதிப்போட்டியின் சிறந்த வீரராக ஜின்னா கழகத்தின் ரிஸ்வானும் சிறந்த கோல் காப்பாளராக நஸ்ஹானும் தெரிவாகினர். ஜின்னா கழகத்தின் முக்கிய வீர்கள் ஐவர் இல்லாத நிலையில் நிலையில் இந்த வெற்றி ஈட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜின்னா அணிக்கான பயிற்றுவிப்பாளர்களாக பகுமான் மற்றும் சப்ரான் ஆகியோர் பணியாற்றினர். இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணம் மற்றும் ஏனைய கிண்ணங்களையும் வழங்கி வைத்தார். இந்த லீக் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஜின்னா அணி 1.0 யடியன அணியைத் தோற்கடித்தது.