தலைவர் மர்ஹூம் எம். எச்.எம். அஷ்ரபின் அடக்கஸ்தலத்தில் ஒன்றுகூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம். எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவாக, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் 10 ஆவது பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்கள் புதன்கிழமை (18) சுபஹுத் தொழுகையின் பின்னர் ஜாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள அன்னாரின் அடக்கஸ்தலத்திற்கு விஜயம் செய்து அவருக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
உயர் பீட உறுப்பினர் மௌலவி கலீல் (மதனி) மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் ஆன்மீக ஈடேற்றத்திற்காகவும், சிறப்பான மறுமை வாழ்வுக்காகவும் துவா பிரார்த்தனையை முன்னின்று நடத்தியதோடு, அனைவருக்குமான உபதேசமும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
(பஹத் ஜுனைட், சீனிஸ்கான்)