தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு வருகை தந்த மத விவகார அமைச்சர்.
புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் சினிதும சுனில் செனவி 17-ஆம் திகதி (17-12-2024) கொழும்பு 7, தெவட்டகஹ செய்ஹ்க் உதுமான் வலியுல்லாஹ் தர்கா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தார்.
அமைச்சரை பள்ளிவாசல் மற்றும் செய்ஹ் உஸ்மான் வலியுல்லாஹ் (ரஹ்) ஸியாரம் ஆகியவற்றின் தலைவர் அல்-ஹாஜ் றியாஸ் ஸாலி வரவேற்றார். துஆப் பிரார்த்தனை இடம்பெற்றதுடன் பின்னர் அமைச்சருக்கு தலைவர் றியாஸ் ஸாலி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். சங்கைக்குரிய ஹலீபதுஷ்ஷாதுலி மௌலவி அஸ்ஸெய்யித் அலவி ஸாலிஹ் மௌலானா (முர்ஸி) உட்பட பலரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)