கலாநிதி அரபாத் கரீமுக்கு சீனன்கோட்டையில் நாளை கெளரவம்.
மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டத்துறையில் கலாநிதி பட்டம் பெற்று பேருவளை மண்ணுக்கு புகழ் சேர்த்த பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்ஹ். கலாநிதி அரபாத் கரீம் (நளீமி) யை வரவேற்று கெளரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 18ஆம் திகதி (2024-12-18) புதன்கிழமை பி.ப 4:00 மணிக்கு சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய தேசமான்ய பாக்கீர் மாக்கார் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறும்.
சீனன்கோட்டை ஜாமிய்யத்துல் மனாரத் ஏற்பாடு செய்துள்ள இந்த கெளரவிப்பு நிகழ்வுக்கு அதன் தலைவர் பஸ்லா சினான் தலைமை வகிப்பார்.சீனன்கோட்டை பள்ளிச் சங்க தலைவரும், ஜாமியா நளீமிய்யா கலாபீட உப தலைவருமான ஏ.எச்.எம் முக்தார் ஹாஜியார், ஜாமியா நளீமிய்யா கலாபீட முதல்வர் அஷ்ஷெய்ஹ். அல்-ஹாஜ் ஏ.ஸீ அகார் முஹம்மத் (நளீமி) சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய அதிபர் பஹீமா பாயிஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்வர்.
அஷ்ஷெய்ஹ். ஏ.ஸீ அகார் முஹம்மத் (நளீமி) பஸ்லா சினான், முர்சிதா ஹஸன், பாத்திமா பஸ்னா, பாத்திமா ஷஹாமா, பாத்திமா றிஸ்மா, கலாநிதி. அரபாத் கரீம் (நளீமி) உட்பட பலரும் இந் நிகழ்வில் உரையாற்றவுள்ளனர். கல்விமான்கள், உலமாக்கள், சீனன்கோட்டையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சமூக நல அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள், ஜாமியத்துல் மனாரத் உறுப்பினர்கள் என பலரும் நிகழ்வில் பங்குபற்றுவர்.
(பேருவளை பீ.எம் முக்தார்)