ஒலுவில் இளைஞர் பேரவை அமைப்பின் அங்குராப்பனமும் நிர்வாகத் தெரிவும்
சமூக மேம்பாட்டிற்காக சமுதாயத்துடன் கைகோர்த்திடும் இளைஞர் சமூகத்தினர்எனும் நோக்குடன் சமூக சேவைக்காக அமைக்கப்பட்ட ஒலுவில் இளைஞர் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வானது அண்மையில் ஒலுவில் அல் ஜாயிசா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஒலுவில் சமூக செயற்பாட்டாளர்களான ஒலுவில் அல் ஜாயிசா மகளிர் கல்லூரியின் அதிபர் Z.கலீலுர் றஹ்மான், சமூர்த்தி கணக்காய்வு உத்தியோகத்தரும் மனித உரிமை ஆர்வலருமான Z . அப்துர் ரஹ்மான் மற்றும் அறிவிப்பாளர் S.சியான் நீதிமன்ற உத்தியோகத்தர்MI. சிபான், முன்னால் பிரதேச சபை உறுப்பினர் ALM. ஹம்சா ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்ததுடன் அமைப்பின் இளைஞர்களுக்காக தங்களது சமூக பணியின் அனுபவங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் பலவற்றையும் பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் அதிதிகள் முன்னிலையில் அமைப்பின் நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றது.தலைவராக : M. ஆதிக்உப தலைவராக : HM.அஸ்கார்செயலாளராக : MN. சஹிஉப செயலாளராக : Z. இம்தாத் ஹுசைன் பொருளாளராக: FM.பஸ்லான்உப பொருளாளராக : MHM.ஹனான் கணக்கு பரிசோதகராக : JM. சதாம்ஊடக இணைப்பாளராக : L.முஹம்மட் சிமாம்ஆகியோர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.
(இஸட்.ஏ.றஹ்மான்)