உள்நாடு

இலங்கை பத்திரிகை பேரவையின் மாநாட்டில் உதயம் ஆசிரியர் என்.எம்.அமீன் உட்பட பலருக்கு கெளரவம்..!

இலங்கை பத்திரிகையாளர் சங்கம் 69ஆண்டு விழாவும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் 10 பேரைக் கௌரவிக்கும் நிகழ்வு இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் குருலு கூச்சனா காரியகரவனா தலைமையில் இலங்கை மண்றக் கல்லூரியில் 17 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஊடக தகவல் துறை பிரதியமைச்சர் வைத்தியர் ஹன்சக்க விஜயமுனி அவர்கள் கலந்து கொண்டார். காரிய கர்ண நினைவரங்கில் இம்முறை சிரேஸ்ட ஊடகவியலாளர் களான தயா லங்காபுர, என்.எம் அமீன், வி தனபாலசிங்கம் திருமதி சீலா விக்கிரமரமசிங்க, பி.பி. இலங்கசிங்க, ஸ்டான்லி சமரசிங்க, எஸ்.எஸ் செல்வநாயகம் துசித்த மல்லசேகர, அலேக்சாந்திர பாலசூரிய , ஆகியோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

கடந்த 69 வருடங்களாக இந்த நாட்டில் தலைசிறந்த ஊடகவியலாளர்கள் ( பத்திரிகை ஆசிரியர்கள், செய்தி ஆசிரியர்கள்) பல தசாப்தங்களாக இந்த நாட்டிக்கு சிறப்பான ஊடகப் பணி செய்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பணப் பரிசில் வழங்கி இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் கௌரவித்து வருகின்றமை பாராட்டக் குரியது. இந்த நாட்டின் சிங்கள மூத்த பத்திரிகையாசிரியரான காலம் சென்ற காரியகர்வன்ன அவர்கள் இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தினை 1955ல் ஸ்தாபித்தார்கள். இன்று 69 வருடமாக பாராட்டு நிகழ்வினை இந்த நிறுவனம் செய்வதோடு தமிழ் முஸ்லிம் சிரேஸ்ட எழுததாளர்கையும் இனம் கண்டு அவர்களையும் கௌரவித்து வருகின்றமை குறிப்பிடததக்கதாகும்.

(அஷ்ரப் ஏ சமத் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *