பேரனை மீட்கச் சென்ற தாத்தா பலி..!
கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பகுதியில் மின்சார கம்பியில் சிக்கிய 17 வயது பேரனை மீட்கச் சென்ற தாத்தா உயிரிழந்துள்ளார்.
ஹேரத்ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த விஜேரத்ன என்ற 74 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த 17 வயதான சிறுவன் வீட்டின் பின்பகுதியில் இருந்த நீரோடையில் குளிக்கச்சென்ற போது காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக ஒருவரினால் சட்டவிரோதமாக இழுக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அப்போது மின்சார கம்பியில் சிக்கிய 17 வயது பேரனை காப்பாற்றுவதற்காக சென்ற தாத்தாவும் மின்சார கம்பியில் சிக்கிள்ளார்.பின்னர் பிரதேசவாசிகள் இருவரையும் காப்பாற்றி கெப்பித்தகொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி 74 வயது நபர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பித்தகொல்லாவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)