கலாநிதிப் பட்டத்தை எடுத்து வர ஜப்பான் பறக்கும் ரன்வலவின் பிரதிநிதி..!
ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகம் வழங்கியதாக கூறப்படும் கலாநிதி பட்டத்தை கொண்டு வருவதற்காக முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பிரதிநிதி ஒருவர் ஜப்பான் செல்லவுள்ளார்.
அதன்படி அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் மிக விரைவில் அந்தப் பல்கலைக்கழகத்துக்குச் செல்லவுள்ளார்.
2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதாகவும் அதனால் அது இணையத்தில் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, 2005 ஆண்டின் பின்னர் பெறப்பட்ட கலாநிதி பட்டச் சான்றிதழ்களை மட்டுமே பல்கலைக்கழக ஒன்லைனில் வழங்குவதாகக் கூறப்படுகிறது.