உள்நாடு

துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட விகாராதிபதியால் குழுக்களாக பிரிந்து மோதிக் கொண்ட கிராம மக்கள்.கட்டுப்படுத்திய கலகத் தடுப்பு பொலிசார்.

எப்பாவல கட்டியாவ யாய 09 பகுதியில் அமைந்துள்ள விகாராதிபதி துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறி விகாரையில் இருந்து அண்மையில் வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் மீண்டும் இன்று (12) விகாரைக்கு திரும்பியமையினால் கிராம மக்கள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை தடுக்க களகத்தடுப்பு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

இன்று (12) மீண்டும் அனுராதபுரம் மாவட்ட பிரதான தேரர்களுடன் தேரர் விஹாரைக்கு வருகை தந்த போது அங்கு பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனை தடுப்பதற்கு தம்புத்தேகம பிரதே உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன குமார தலைமையில் கல்நேவ ,எப்பாவல மற்றும் பிரிகாரகம பொலிஸ் நிலையங்களில் இருந்து களகத்தடுப்பு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *