உள்நாடு

கூட்டுறவு இயக்கத்தின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்த வேண்டும்.வட மத்திய ஆளுனர்.

நாட்டின் பொருளாதாரத்தை சூரையாடும் உயர்மட்ட வர்த்தகர்களிடம் இருந்து நாட்டை  விடுவித்து கூட்டுறவு இயக்கத்தின் ஊடாக பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை வலுவூட்டி கூட்டுறவு நிறுவனத்தையும் பலப்படுத்தும் காலம் வந்துள்ளதாக வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தெரிவித்தார்.

மெதிரிகிரிய புதிய நகரில் 300 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கூட்டுறவு கிராமிய வங்கி மற்றும் கோப் சிட்டி வர்த்தக நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதுள்ள நெல் ஏகபோகத்தை ஒழித்து நெல் கொள்வனவு செய்யப்பட்டு சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலைகளை வலுப்படுத்துவதும் நாட்டு மக்களின் வாழ்க்கை சுமையை குறைப்பதும் அழகான வாழ்வுடன் வளமான நாட்டை உருவாக்குவதும் புதிய அரசின் நிகழ்ச்சி நிரல் என்றும் அவர் தெரிவித்தார்.

இனி வரும் காலங்களில் இந்நாட்டின் தீர்க்கமான காரணியாக கூட்டுறவு இயக்கம் மேம்படுத்தப்படும்.சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் அரிசித் தட்டுப்பாட்டைப் போக்க நாட்டில் உற்பத்தியாகும் அரிசியில் கணிசமான தோகையை கொள்முதல் செய்து சந்தைக்கு விநியோகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு வர்க்கத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை ஜனாதிபதி விரிவுபடுத்தியுள்ளதுடன் .விவசாயிகள் இணைந்து விவசாயத்துறையினை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.கெளபி , குரக்கன்,பயறு மற்றும் உழுந்து உள்ளிட்ட தானியங்களை அதிகளவில் பயிரிட வேண்டும்.இதற்கான வசதிகளையும் ஆதரவையும் வழங்கி அறுவடையை முழுமையாக வழங்குவதற்கான சந்தையை உருவாக்குவதே அரசின் நோக்கம் எனவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *